உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திட்டக்குடி; திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.நம்பிக்கை மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவர் (பொறுப்பு) சேபானந்தம் தலைமை தாங்கினார். டாக்டர்கள் புகழேந்தி, அறிவுச்செல்வன், கமலக்கண்ணன், சங்கீதா, சித்தா டாக்டர் பெரியசாமி, தலைமை செவிலியர் பெரியநாயகம் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், பொது மக்கள் பலர் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொண்டனர். நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை