உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அக் ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் குறும்பட போட்டி

அக் ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் குறும்பட போட்டி

கடலுார்: கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் குறும்பட போட்டி நடந்தது.மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில், 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.போட்டி பங்கேற்பாளர்கள் தங்கள் குறும்படங்களை ஒரே நாளில் கருத்துருவாக்குதல், படமாக்குதல், ஒளிச்சேர்க்கை செய்தல் மற்றும் திருத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினர் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், போட்டியில் வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசு வழங்கினார். விழாவில், ஆலோசகர் ரமணிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை