உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி

கடலூர் : சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். பண்ருட்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குத்து அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில் அந்த மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வடக்குத்து கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை