உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா

தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா

புவனகிரி: தமிழக அரசு சார்பில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேல்சாமி, மேலாண்மைக் குழுத் தலைவர் ஷர்மிளா, கல்விக்குழு உறுப்பினர்கள் சண்முகம், சரஸ்வதி மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுமதி வரவேற்றார். தமிழக அரசு சார்பில் அண்ணா தலைமைத்துவ விருதுடன், ரூ.10 லட்சம் பரிசு பெற்ற புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் ஏற்புரையாற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் கலைச்செல்வி, செல்வி, செல்வம், தலைமை ஆசிரியர்கள் தியாகராஜன், துரை மணிராஜன், காமராஜர் பேரவை தலைவர் மோகன்தாஸ், செந்தில்குமார் வாழ்த்திப் பேசினர். விழாவில், ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், நிர்மலா, சசிகலா, சுமதி, ஆரோக்கியமேரி, உஷா, சங்கரி, லியோ அந்துவான், புவனசுந்தர், தங்கம், கீர்த்தனா பங்கேற்றனர். விழாவை ஆசிரியை மேரிவிமலி தொகுத்து வழங்கினார். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை