உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோதம் ஒருவர் கைது

முன்விரோதம் ஒருவர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த கருக்கை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லகுமார், 37; ஆம்புலன்ஸ் டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லகுமார் அண்ணன் தவபாலன், செல்லகுமார் மனைவி சந்திரலேகா, அவரது சித்தப்பா கோதண்டம் ஆகியோரிடம் நாராயணசாமி மகன்கள் ராஜாராமன், 36; சிவமணி, சிவசங்கரன் ஆகிய 3 பேரும் தகராறு செய்து தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து ராஜாராமனை கைது செய்தனர். மேலும், அவரது சகோதாரர்கள் சிவமணி, சிவசங்கரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை