மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் :
21-Oct-2024
பண்ருட்டி: காடாம்புலியூரில் ஒருவரை வழிமறித்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் பாண்டிதுரை,33; இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து கடந்த ஓராண்டாக கீழ்மாம்பட்டில் உள்ளார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் 2 ம்தேதி இரவு 8:00 மணிக்கு காடாம்புலியூர் புறங்கனி சாலையில் கந்தசாமி என்பவரின் கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்குவந்த சென்னை அம்பத்துாரை சேர்ந்த செல்வமணி மகன் சதிஷ்,32; காடாம்புலியூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிவண்ணன்,31; ஆகிய இருவரும் பாண்டிதுரையை வழிமறித்து நீ எந்த ஊர் என கேட்டு பாண்டிதுரையை அசிங்கமாக திட்டி தாக்கி,கொலைமிரட்டல் விடுத்தனர்.பாண்டிதுரை கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் சதிஷ்,32;மணிவண்ணன்,31; ஆகிய இருவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
21-Oct-2024