உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா 

புவனகிரி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா 

புவனகிரி : புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை விழா நடைபெற்றது.புவனகிரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கந்தன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, லட்சுமி, மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மதிட்ட தலைவர் மனோகரன், டாக்டர் கதிரவன், கீரப்பாளையம் காமராஜர் கல்லுாரி முதன்மை செயல் அலுவலர் தமிழரசு சம்பந்தம், ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனர் துரைமணிராஜன், கவுன்சிலர் சண்முகம், காமராஜர் பேரவை நிறுவனத் தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங் கினர். கண்ணதாசன் பேரவைத் தலைவர் கல்யாணசுந்தரம், ஊழல் எதிர்ப்பு இயக்க உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை