மேலும் செய்திகள்
வாகனம் மோதி பெண் பலி
26-Dec-2024
மயிலம்; மயிலம் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது பைக் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி, டவுன்ஷிப் 'சி'பிளாக், 25 மெயின் ரோட்டை சேர்ந்த ரமேஷ் மகன் கிஷோர்குமார், 26; இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நெய்வேலியில் உள்ள தனது வீட்டிலிருந்து கிஷோர்குமார் நேற்று சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார். பிற்பகல் 3:30 மணி அளவில் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி கிராமத்தின் அருகே, பைக் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற விளங்கம்பாடியை சேர்ந்த விவசாயி ஜெயராமன், 65; மீது எதிர்பாராத விதமாக பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கிஷோர்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிஷோர்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
26-Dec-2024