உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது கார் மோதல்: தம்பி சாவு; அக்கா காயம்

பைக் மீது கார் மோதல்: தம்பி சாவு; அக்கா காயம்

புவனகிரி: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாளையம் ஏரிமேட்டு தெரு, பிரபாகரன், 35; பால் பண்ணையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை புவனகிரி பெருமாத்துாரில் உள்ள தனது சகோதரி லலிதாவுக்கு பொங்கல் வரிசை கொடுத்துவிட்டு, அவரை பைக்கில் ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.புவனகிரி அடுத்த மஞ்சக் கொல்லை அருகில் சென்ற போது, எதிரே வந்த கார் (கே.ஏ.53. எம்எல்.1753) பைக் மீது மோதியது. காயமடைந்த இருவரையும் மருதுார் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதித்து, பிரபாகரன் இறந்து விட்டதாக கூறினார். லலிதா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை