உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., துணைத் தலைவர் அன்னதானம் வழங்கல்

பா.ஜ., துணைத் தலைவர் அன்னதானம் வழங்கல்

கடலுார் : அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கடலுார் கிழக்கு மாநகர பா.ஜ., கட்சி துணைத் தலைவர் பிரகாஷ், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.கடலுார் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில், கிழக்கு மாநகர பா.ஜ., கட்சி சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாநகர பா.ஜ., துணைத் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.அப்போது, நகர தலைவர் வேலு வெங்கடேசன், ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் கிருஷ்ணன், ஓ.பி.சி., அணி துணைத் தலைவர் லோகு, மாவட்ட நலத்திட்ட பிரிவு செயலாளர் சாண்டில்யன் மற்றும் 21வது வார்டு கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ