உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் கணினி அறிவியல், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் நடந்த முகாமை, இயந்திர பொறியியல் துறைத் தலைவர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் பவானி, மருத்துவக் கல்லூரி நோய் குறியீட்டு துறைத் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.முகாமில் மாணவர்கள் சார்பில் 39 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பழகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ