உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளத்தில் பெண் சிசு உடல்: தாயிடம் விசாரணை

குளத்தில் பெண் சிசு உடல்: தாயிடம் விசாரணை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே பிறந்த மூன்று நாட்களே ஆன பெண் சிசுவை பெற்ற தாயே குளத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சேல்விழி கிராமத்தில் உள்ள எருக்கன் குளத்தில் பிறந்த சில தினங்களே ஆன பச்சிளம் பெண் சிசு உடல் மிதந்தது. தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சிசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து விசாரித்ததில் சேல்விழி கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கு கடந்த 19ம் தேதி இரவு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது.அதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் சுகன்யாவிடம் போலீசார் விசாரித்தனர்.அதில், பிறந்த சில மணி நேரத்தில் பெண் சிசுவை, அவர் குளத்தில் வீசியது தெரியவந்தது.அவருக்கு ஏற்கனவே, ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த குழந்தையை ஏன் கிணற்றில் வீசினார் என, சுகன்யா மற்றும் அவரது கணவர் பாபுவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை