உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு

வெள்ளாற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு

திட்டக்குடி, : திட்டக்குடியில் மாடு மேய்த்த முதியவர், வெள்ளாற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 60. இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றங்கரையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். பகல் 2:00 மணியளவில் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதியில் உள்ள வெள்ள நீரில் சிக்கினார். அவருடன் மாடு மேய்த்தவர்கள் கூச்சலிட்டனர்.தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் ஆற்றில் சிக்கிய முதியவரை ஒரு மணி நேரம் போராடி, முதியவரை சடலமாக மீட்டனர். தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சடலத்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை