உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு

கடலில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு

கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் மூழ்கிய பள்ளி மாணவர் உடல் மீட்கப்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சந்தோஷ், 16; கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் சந்தோஷ், தனது நண்பர்களுடன் கடலுார், தேவனாம்பட்டிணம் சில்வர் பீச்சில் குளித்தார்.அப்போது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தேவனாம்பட்டிணம் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன், கடலில் மூழ்கிய சந்தோைஷ தேடினர். மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை, அவரது உடல் தேவனாம்பட்டிணத்தில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !