குத்துச்சண்டை போட்டி: தவ அமுதம் பள்ளி சாதனை
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 10 பேர் தங்கம், 5 பேர் வெள்ளி பதக்கங்கள் வென்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பரமேஸ்வரி, ஆரோக்கிய சிலம்பரசி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.