உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: பெண்ணாடத்தில் துணிகரம்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: பெண்ணாடத்தில் துணிகரம்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 68; இவர், நேற்று முன்தினம் தனது மனைவி, மகனுடன் சென்னையில் உள்ள தனது மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றார்.நேற்று இரவு 9:00 மணியளவில் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு, உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3 சவரன் நகை,5 ஆயிரம் பணம் திருடுபோனது தெரிந்தது.தகவலறிந்து வந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !