உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

கடலூர் : கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இலக்கிய மன்றங்களின் துவக்க விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜயோககுமார் வரவேற்றார். கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி பொருளாதாரத் துறை தலைவர் கண்ணன் பேசினார். இலக்கிய மன்றங்களின் சார்பில் நவீன், சாய்கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிக்கை படித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் புவனேஸ்வரி, மோகனாம்பாள் ஆகியோர் செய்திருந்தனர். துணை முதல்வர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி