உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்மை கரும்பு சாகுபடியில் கூடுதல் மகசூல் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

செம்மை கரும்பு சாகுபடியில் கூடுதல் மகசூல் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

கடலூர் : புதிய செம்மை கரும்பு சாகுபடி மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் என கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: செம்மை கரும்பு சாகுபடியில், குறைந்த அளவு விதை, தண்ணீர், தேவையான அளவு உரத்தை பயன்படுத்தி அதிகளவு மகசூல் பெறலாம். அதன்படி விதை கரணையில் இருந்து ஒரு பருவை வெட்டி எடுத்து குழித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்து, 25 முதல் 35 நாட்களில் நடவு செய்ய வேண்டும். வயலில் 5 அடி பார் இடைவெளியும், கரும்பு நாற்றுகளுக்கு இடையில் 2 அடி இடைவெளியும் இருக்க வேண்டும். தற்போது ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 48 ஆயிரம் விதைக் கரணைகள் நடவு செய்யப்பட்டு, 25 ஆயிரம் அரவைக் கரும்பு பெறப்படுகிறது. ஆனால் செம்மை கரும்பு சாகுபடியில் 5 ஆயிரம் நாற்றுகளை நடவு செய்து, 45 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை அரவைக் கரும்பு பெறலாம். நடவு வயலில் அதிகளவு நீர்தேக்கம் தேவையில்லை. அதிகளவு நீர்த் தேக்கம் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். நாற்று நடவின் மூலமும் மாற்று சால் பாசனை முறையின் மூலமும் கரும்பின் நீர் தேவையை 30 முதல் 40 சதவீதம் வரை குறையும். சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் தேவை 80 சதவீதம் வரை சிக்கனமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ