உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் நீர்வள, நிலவள திட்டம் வியாபாரிகள்-விவசாயிகள் கலந்துரையாடல்

பண்ருட்டியில் நீர்வள, நிலவள திட்டம் வியாபாரிகள்-விவசாயிகள் கலந்துரையாடல்

பண்ருட்டி : பண்ருட்டியில் நீர்வள, நிலவள திட்டம் சார்பில் வியாபாரிகள், விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பண்ருட்டி லட்சுமிபதி செல்லம்மாள் திருமண மண்டபத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நீர்வள நிலவளத்திட்டம் 2011-2012ம் கெடிலம் உபவடி நிலப்பகுதி விவசாயிகள்- வியாபாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

வேளாண் துணை இயக்குனர்( வேளாண் வணிகம்) தனவேல் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சுரேஷ் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண் துணை இயக்குனர் அசோகன், விருத்தசாசலம் வேளாண் அறிவியல் நிலை இணை பேராசிரியர் சுப்ரமணியன், உதவி பேராசிரியர்கள் கண்ணன், சீனுவாசன் ஆகியோர் விவசாயிகள் விவசாய பொருட்களை நேர்த்தியாக உற்பத்தி செய்வது குறித்தும், விற்பனை செய்வது குறித்தும் சிறப்புரையாற்றினர். இதில் மணம்தவிழ்ந்தபுத்தூர் ஏரி நீர்பாசன சங்கத் தலைவர் குப்புசாமி, செம்மேடு முன்னாள் தலைவர் அர்ச்சுனன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை