உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூன்று திருமணம் செய்த பெண் மர்ம சாவு

மூன்று திருமணம் செய்த பெண் மர்ம சாவு

கடலூர் : கடலூர் முதுநகரில், மூன்று பேரை திருமணம் செய்த பெண், மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் முதுநகர், வீரபத்ரசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி, 35. இவருக்கு, 13 ஆண்டுகளுக்கு முன், புதுசத்திரம் சீனுவாசன் என்பவருடன் திருமணமாகி பிரேமா, 12, என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வந்த ஜோதி, மணக்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கும், திருச்சியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொண்டதில் தயாநிதி, 5, என்ற மகன் உள்ளார்.

அருளிடம், ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து, செம்மங்குப்பம் விஸ்வநாதன் என்பவரை, ஜோதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் முதுநகர் வீரபத்ரசுவாமி கோவில் தெருவில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு அவரது சகோதரர் நடராஜன் வந்தார். ஜோதி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி