புளிய மரத்தில் கார் மோதி தந்தை பலி: மகன் காயம்
ராமநத்தம்: ஆவட்டி அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை இறந்தார். மகன் படுகாயமடைந்தார்.சென்னை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜு, 50. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று தனது மகனுடன் (டி.என்., 05 - ஏ.டபிள்யூ 4873) ஹூண்டாய் காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். காரை, ராஜு ஓட்டிச்சென்றார்.நேற்று காலை 6:30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆவட்டி அடுத்த கல்லுார் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.அதில், ராஜு அதே இடத்தில் இறந்தார். அவரது மகன் நவீன், 20; படு காயமடைந்து, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.