| ADDED : பிப் 15, 2024 06:54 AM
பண்ருட்டி : நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்,77; இவருக்கு விசூர் கிராமத்தில் நிலம் உள்ளது. இவருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான தேவராசுவிற்கும் நிலத்தகராறு உள்ளது.இந்நிலையில், கடந்த 5ம் தேதி, தேவராசு தரப்பினர், பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த மரங்களை வெட்டினர். அதனை கண்டித்த ராமலிங்கத்தை தேவராசு மகன் ராஜ்குமார், மணிவேல், தேவராசு, ராஜ்குமார் மனைவி அருணா ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் இருதரப்பினரையும் அழைத்தனர். அதன்படி கடந்த 7 ம் தேதி, முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் வந்த ராஜ்குமார் மனைவி அருணாவை ராமலிங்கம் மகன்கள் ஜெய்சங்கர், மனைவி வேலு, ஜெயக்கொடி, குணா ஆகியோர் தாக்கியுள்ளனர்.இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் ராமலிங்கம்,77; கொடுத்த புகாரின்பேரில் ராஜ்குமார், தேவராசு, மணிவேல், அருணா ஆகிய 4பேர் மீதும், அருணா கொடுத்த புகாரின்பேரில் ஜெய்சங்கர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.