உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கல்லுாரி மாணவர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

புதுச்சத்திரம் :பஸ்சை வழிமறித்து கல்லுாரி மாணவர்களை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சஞ்சீவ்குமார், 20; கல்லுாரி மாணவர். இவர், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளனர். இதில் காயல்பட்டு அணியினர் முதல் பரிசையும், ஆண்டார்முள்ளிபள்ளம் அணியினர் இரண்டாம் பரிசையும் பெற்றனர். இதில் காயல்பட்டு அணியினர் ஏமாற்றி, முதல் பரிசு பெற்றதாக, ஆண்டாள்முள்ளிபள்ளத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன்கள் பவித்ரன், விஷ்ணு, தாஸ் மகன் இளங்கீரன், பாஸ்கரன் ஆகியோர் சேர்ந்து, நேற்று பஸ்ஸில் வந்த சஞ்சீவ்குமார், இவரது தம்பி கல்லுாரி மாணவர் சர்சிவிராமன் ஆகியோரை ஆண்டார்முள்ளிபள்ளம் பஸ் நிறுத்தத்தில் வழிமறித்து தாக்கினர். புதுச்சத்திரம் போலீசார், பவித்ரன், விஷ்ணு, இளங்கீரன், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை