உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முந்திரி சாகுபடி பயிற்சி

முந்திரி சாகுபடி பயிற்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் பட்டியலின விவசாயிகளுக்கு முந்திரி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ராங்கியத்தில் நடந்த பயிற்சிக்கு, ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜெயப்பிரபாவதி, இணை பேராசிரியர் (பூச்சியியல் துறை) வரவேற்றார். இணை பேராசிரியர்கள் பாஸ்கரன் (தோட்டக்கலைத்துறை), சத்தீஷ், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் முந்திரி ரகங்கள், மேலாண்மை தொழில்நுட்பங்கள், முந்திரி பழத்தில் மதிப்புக் கூட்டுதல் குறித்து பயிற்சியளித்தனர். அதில், பட்டியலின விவசாயிகள் 50 பேர் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை