| ADDED : நவ 24, 2025 06:17 AM
பண்ருட்டி: காடாம்புலியூரில் முந்திரி இயந்திர கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் முந்திரி தினவிழாவை முன்னிட்டு நேற்று, பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ஏ.வி.மகாலில் முந்திரி இயந்திர கண்காட்சிதுவங்கியது. நிகழ்ச்சியில், முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், பொருளாளர் செல்வமணி ஆகியோர் வரவேற்றனர். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், 'முந்திரி கொட்டைகள் சென்னை, துாத்துகுடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்தோம். சங்க முயற்சி காரணமாக மத்திய, மாநில அரசு நடவடிக்கை காரணமாக, விரைவில் கடலுார் துறைமுகத்தில் முந்திரி கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன,' என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து ,100 பெண் தொழிலாளர்கள் 23 நிமிடங்களில் முந்திரி கொட்டைகளை கை இயந்திரம் மூலம் உடைக்கும் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் அபேடா உதவி பொதுமேலாளர் சோபனாகுமார், வேளாண் துணை இயக்குனர் பூங்கோதை, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் விஜயகுமார், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முந்திரி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெறும் விழாவில், கடலுார் சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற் றும் முந்திரி ஏற்றுமதி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த கண்காட்சி இன்று டன் நிறைவு பெறு கிறது.