உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏகநாயகர் கோவிலில் மாட்டு பொங்கல் விழா

ஏகநாயகர் கோவிலில் மாட்டு பொங்கல் விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீபகவான் மகாவீர் பசு மடத்தில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, ஸ்ரீஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரியந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை ஜே.சி., ஜூவல்லரி அசோக்குமார் ஜெயின், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். திட்டக்குடி அண்ணாமலை ராஜபிரதாபன், மருத்துவர் அன்புச்செழியன், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் கோபிகிருஷ்ணா, விருத்தாசலம் அரிமா சங்க செயலாளர் கண்ணகி, பொருளாளர் பாலு.நிர்வாகிகள் சபாநாதன், முத்து நாராயணன், நடேசன், சண்முகம், ராஜகோபால், ரோட்டரி சங்க தலைவர் சம்பத், பேராசிரியர் பரமசிவம் , வர்த்தகர் சங்க மாவட்ட செயலாளர் விஜய் டெக்ஸ் ரவிச்சந்திரன், மற்றும் அரிமா சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஏகநாயகர் வழிபாட்டு மன்றத்தினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ