உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளம் துார்வாரும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

குளம் துார்வாரும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

விருத்தாசலம் : வயலுார் அய்யனார் குளம் துார்வாரும் பணியை, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார்.விருத்தாசலம் வயலுார் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள அய்யனார் குளத்தினை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.நாளடைவில் குளம் பாராமரிப்பின்றி, துார்ந்துபோனது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குளத்தை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்பேரில், 2023- 24 நகர்புற மேம்பாட்டு திட்டம், ரூ.54 லட்சம் மதிப்பில் துார்வார நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று குளம் துார்வாரும் பணி துவங்கியது. பணியை, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார்.நகராட்சி துணை சேர்மன் ராணி தண்டபாணி, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., நகர பொருளாளர் மணிகண்டன், நகராட்சி பொறியாளர் சுரேந்திரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி