உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆழத்து விநாயகர் கோவிலில் தேரோட்டம்

ஆழத்து விநாயகர் கோவிலில் தேரோட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழத்து விநாயகர் சுவாமிக்கு கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள், இரவு சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.எட்டாம் நாளான நேற்று முன்தினம் பாரிவேட்டை உற்சவமும், நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:00 மணியளவில் நடந்த தேரோட்டத்தில் ஆழத்து விநாயகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.இதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ