உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் திட்ட முகாம்

சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் திட்ட முகாம்

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியில் நடந்த 5ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகமை, சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.சிதம்பரம் நகராட்சியில் 5ம் கட்ட சிறப்பு முகாம், காசிமடத்தெருவில் நடந்தது. சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்து பேசினார். கமிஷனர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் இந்துமதி அருள் வரவேற்றார்.தி.மு.க., நகர அவைத் தலைவர் ராஜராஜன், கவுன்சிலர்கள் மணிகண்டன், அப்பு சந்திரசேகர், ராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், இளங்கோவன், நகர பொருளாளர் கிருபாகரன், தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் சுதாகுமார், லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முகாமில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மனுக்கள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை