உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் தினவிழா

 ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் தினவிழா

மந்தாரக்குப்பம்: கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் சரோஜினி முன்னிலை வகித்தார். குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் பரிசுகள் வழங்கி பேசினார். ஆசிரியர்கள் சாந்தி, மேரிபுஷ்பலதா, லயோனா, கீதாமஞ்சித், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை