உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் கிறிஸ்துமஸ்

 வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் கிறிஸ்துமஸ்

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு வாழ்த்தி பேசினர். விழாவில், மாணவ, மாணவிகள் கிறிஸ்துவ பாடல்களை பாடியும், நாடகத்தின் மூலமும் ஏசுவின் சிறப்புகள் குறித்து விளக்கினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இனிப்புகள், பரிசு வழங்கினர். விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ