உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மந்தாரக்குப்பம்: திருப்பயர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஜெயப்பிரியா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ரேவதி வரவேற்றார். இதில் பள்ளி மாணவர்கள் கிறிஸ்து பிறப்பு குறித்தும், குடில் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரம், தேவதைகள், சீடர்கள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, பாடல்களை பாடி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சிறுவர்கள் அழகிய தேவதைகளாகவும் தேவ துாதர்களாகவும் வேடம் அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிர்வாக அலுவலர் நேஹா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை