உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம வங்கி சார்பில் துாய்மை விழிப்புணர்வு

கிராம வங்கி சார்பில் துாய்மை விழிப்புணர்வு

சிதம்பரம் : சிதம்பரத்தில், தமிழ்நாடு கிராம வங்கியின் சிதம்பரம், கிள்ளை, கீரப்பாளையம் மற்றும் பு.முட்லூர் கிளைகள் சார்பில், துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் கிளை மேலாளர் பாலசங்கீதா ஒருங்கிணைத்தார். சகஜானந்தா அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை, வங்கி விழுப்புரம் மண்டல மேலாளர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். கிள்ளை கிளை மேலாளர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த பெரியசாமி சிறப்புரையாற்றினார். தெற்கு வீதியில் ஊர்வலம் நிறைவு பெற்றது.பு.முட்லூர் கிளை மேலாளர் வினோத் பாலாஜி, மண்டல அலுவலர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள், சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கீரப்பாளையம் கிளை மேலாளர் சந்தோஷ் �ராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ