உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்

கல்லுாரி ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்

கடலுார் : கடலுார் அரசு கல்லுாரியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு கடலுார் கிளை தலைவர் திலக்குமார் தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கிளை செயலாளர் சேதுராமன், இணைச் செயலாளர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் ராஜகுமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஹென்றி, வேணி மற்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கடலூர் கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி