உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தங்கப்பத்திரம் விற்பனை துவக்கம்

தங்கப்பத்திரம் விற்பனை துவக்கம்

கடலுார் : கடலுார் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை துவங்க உள்ளது.கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு;2023--24 நிதியாண்டின் நான்காவது தொடர் தங்கப் பத்திரங்கள் விற்பனை, இன்று 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மத்திய அரசால் துவங்கப்பட உள்ளது. இத்தங்கப்பத்திரத்தினை மத்திய அரசு சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.இந்த நான்காவது தொடரில் 1 கிராம் சுத்தத்தங்கத்தின்(24 கேரட்) விலை 6,263 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், இத்தங்கப்பத்திர விற்பனைத்திட்டத்தில் 2.50 சதவீதம் ஆண்டு வட்டியாக அரையாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும். இத்தங்கப்பத்திரத்தினை முதலீடு செய்த தேதியில் இருந்து, 8 ஆண்டு கால முடிவில் முதிர்வுத் தொகையினை இந்திய ரூபாயாக பெற்றுக்கொள்ளலாம்.மேலும், முதலீடு செய்த தேதியில் இருந்து 5 ஆண்டிற்கு பிறகு வட்டி பெறும் தேதியிலும் இத்தங்கப்பத்திரத்தினை முன்முதிர்வு செய்து கொள்ளலாம். 2015ம் ஆண்டு நவ., மாதத்தில் ஒரு கிராம் தங்க பத்திரம் 2,684 ரூபாய் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு 2023ம் ஆண்டு நவ., மாதத்தில் 6,132 ரூபாய் திரும்ப கிடைத்தது.எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இத்திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை