உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுார் லோக் சபா தொகுதிக்குட்பட்ட கடலுார் சட்டசபை தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த, கூட்டத்திற்கு தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.இதில், தாசில்தார் பலராமன் பேசுகையில், சட்டசபை தொகுதிக்குட்பட்ட 227 ஓட்டுச்சாவடிகளிலும் மண்டல அலுவலர்கள், போலீசார் இணைந்து கூட்டாய்வு செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வாக்காளர்கள் ஓட்டளிக்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கையை ஆர்.டி.ஓ.,விடம் வழங்க வேண்டும் என்றார்.அப்போது, மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை