மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
47 minutes ago
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு மா நில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் ஜெயசங்கர், சக்கரவர்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் கோவிந்தராஜூலு, அன்பழகன், போராட்டக்குழு பொருளாளர் குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகள் அனைத்து பணியாளர்களுக்கும் பாரபட்சமின்றி நிபந்தனையின்றி 20 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 2021க்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
47 minutes ago