உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுாரில் கூட்டுறவு பிரசார முகாம்

 கடலுாரில் கூட்டுறவு பிரசார முகாம்

கடலுார்: கடலுாரில் சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி, கூட்டுறவு எழுத்தறிவு பிரசார முகாம் நபார்டு சார்பில் நடந்தது. நபார்டு கடலுார் மாவட்ட மேம்பாட்டு அலுவலர் ஸ்ரீசசிகுமார், தலைமை தாங்கி, கூட்டுறவுகள் மூலம் நுண் கடனை ஊக்குவிப்பதற்காக 30 சுய உதவிக்குழுக்களிடம் கூட்டுறவுகள் உரையாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மகளிர் திட்ட ஏ.பி.ஓ.,ராஜேஷ்குமார், பங்கேற்பாளர்களிடம் சுய உதவிக்குழுக்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதேபோல் உளுத்துார் பால் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. அதில் பால் சங்கங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பால் சங்கங்களை கூட்டுறவு வங்கியின் எல்லைக்குள் கொண்டு வருவது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பால் விவசாயிகளுக்கு கிடைக்கும் கடன் மற்றும் பிற வசதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்