மேலும் செய்திகள்
டோல்கேட் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது
20-Mar-2025
புதுச்சத்திரம், : சொத்து தகராறு காரணமாக அண்ணனை தாக்கிய, தம்பி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன், 59 ; கூலித் தொழிலாளி. இவருக்கும் அவரது தம்பி கண்ணன் என்பவருக்கும் இடையே, சொத்து தகராறு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன்,52; அவரது மனைவி குமாரி,42; ஆகிய இருவரும் சேர்ந்து, குணசேகரனை தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், புதுச் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, கண்ணன், குமாரியை கைது செய்தனர்.
20-Mar-2025