உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் - விருதை நான்கு வழிச்சாலை பணி... நிறைவடைந்தது; வாகன ஓட்டுனர்கள் , பயணிகள் மகிழ்ச்சி

கடலுார் - விருதை நான்கு வழிச்சாலை பணி... நிறைவடைந்தது; வாகன ஓட்டுனர்கள் , பயணிகள் மகிழ்ச்சி

கடலுார் பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் - சேலம் (சின்னசேலம் கூட்ரோடு வரை) மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (சி.வி.எஸ்.,சாலை), கடந்த 2015ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 2021 - 2022ம் ஆண்டில், கடலுார் பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரையும்; விருத்தாசலம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையும் இரண்டு தொகுப்புகளாக பணிகள் துவங்கப்பட்டன.அதில், கடலுார் அடுத்த அன்னவெளி, வன்னியர்பாளையம், பெரியகாட்டுசாகை, சுப்ரமணியபுரம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, த.பாளையம், மந்தாரக்குப்பம் அடுத்த ஊ.மங்கலம் மற்றும் விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை, விருத்தாசலம் அடுத்த பரவளூர், விளாங்காட்டூர் உள்ளிட்ட விபத்து அதிகம் நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டன.இப்பகுதிகள் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தன. இதற்காக சாலையோர நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, சிறு பாலங்கள், கல்வெர்ட்டுகள் அகலப்படுத்தப்பட்டன. மேலும், நகர பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் வசதியாக பார்க்கிங் செய்திட ஃபேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. தவிர ஆக்கிரமிப்பு கட்டடங்கள், விளைநிலங்கள் கையகப்படுத்தி, சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதன் மூலம் எதிரெதிர் திசைகளில் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்லும் வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, பொன்னாலகரம் டோல்கேட் இருபுறம் சாலை அகலப்படுத்தப்பட்டது. மேலும், புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நேற்று இறுதிகட்டமாக சாலையை அகலப்படுத்தும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.இதன் மூலம் கடலுார் - விருத்தாசலம் இடையே 225 கோடி ரூபாயில் நான்குவழிச்சாலையாக மாற்றும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி...

வழக்கமாக மாவட்ட தலைநகரான கடலுாருக்கு விருத்தாசலத்தில் இருந்து செல்ல ஒரு மணி நேரம் 30 நிமிடம் தேவைப்படும். தற்போது, 45 நிமிடத்தில் செல்ல முடியும் என்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், எந்தவித இடையூறும் இல்லாமல், விபத்து அபாயமின்றி நான்குவழிச்சாலையில் சென்றுவர முடியும் என்பதால் வாகன ஓட்டிகள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை