உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெட்டுப்போன உணவு சாப்பிட்ட எட்டு பேருக்கு வாந்தி பேதி

கெட்டுப்போன உணவு சாப்பிட்ட எட்டு பேருக்கு வாந்தி பேதி

கடலூர் : கெட்டுப்போன உணவை சாப்பிட்டு வாந்தி - பேதியால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் அடுத்த கோதண்டராமாபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி கனகவள்ளி. இவர் திருச்சோபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் அந்த கம்பெனி கேன்டீனில் மீதம் இருந்த உணவுகளை பொட்டலம் கட்டிக் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி வந்த கனகவள்ளி தனது வீட்டிற்கு வந்ததும் அந்த உணவை அருகில் இருந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு சாப்பிட்டார். இந்த உணவை சாப்பிட்ட கனகவள்ளி, ராஜலிங்கம், 65, வினோதினி, 30, ராஜதர்ஷணி, 13, ஜோதிலட்சுமி, 26, அமராவதி, 65, நிலா, 24, முருகன் ஆகிய 8 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது. உடன் அவர்கள் அனைவரும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !