உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் தெய்வ சேக்கிழார் செந்தமிழ் விழா துவக்கம்

சிதம்பரத்தில் தெய்வ சேக்கிழார் செந்தமிழ் விழா துவக்கம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்ப்பேரவை சார்பில் மூன்று நாள் நடைபெறும் தெய்வ சேக்கிழார் செந்தமிழ் விழா நேற்று துவங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் நேற்று மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளாசியோடு துவங்கியது. காசி மட முத்துக்குமாரசாமி தம்பிரான் ஆன்மிக உரையாற்றினார். ஆனந்த நடராஜ தீட்சிதர் வாழ்த்திப்பேசினார். சிவராம வீரப்பன் அறிமுக உரையாற்றினார். கோவை சிவப்பிரகாச சுவாமிகள் இலக்கிய பேருரை ஆற்றினார். சேக்கிழார் பாடிய நாயன்மார்கள் வரலாறு சமூக வாழ்க்கை ஏற்க தக்கனவா, எல்லை கடந்தனவா எனும் தலைப்பில் அகரமுதல்வன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ