உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண் கடத்தல் டிரைவருக்கு வலை

இளம்பெண் கடத்தல் டிரைவருக்கு வலை

கடலூர் : இளம் பெண்ணை கடத்திச் சென்ற வேன் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.கடலூர், திருப்பாதிரிப்புலியூர் நடேசன் நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் நித்யப்ரியா, 20; இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.தினமும் கல்லூரிக்கு ஆம்னி வேனில் சென்று வந்தார். அப்போது வேன் டிரைவரான பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும், நித்யப்ரியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.இதனை அறிந்த மோகன், மகள் நித்யப்ரியாவின் படிப்பை நிறுத்தினார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி நள்ளிரவு 2 மணிக்குப் பிறகு நித்யப்ரியாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்ததில், நித்யப்ரியாவை, வேன் டிரைவர் விஜயகுமார் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து, விஜயகுமாரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி