உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசாணைகளை தமிழில் வெளியிட முற்போக்கு எழுத்தாளர்கள் கோரிக்கை

அரசாணைகளை தமிழில் வெளியிட முற்போக்கு எழுத்தாளர்கள் கோரிக்கை

கடலூர் : கடலூர் மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு டவுன்ஹாலில் நடந்தது.மாவட்டத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கிளை இணைச் செயலர் சுந்தர ராஜன் வரவேற்றார். ஜனார்த்தனன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச்செயலர் ராமச்சந்திரன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலர் ஜீவகாருண்யன், பொருளாளர் வெங்கடேசன் அறிக்கை வாசித்தனர். பால்கி, சந்திரசேகரன், பழனி, சத்தியமூர்த்தி, சுப்புராமன், கலியமூர்த்தி தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில செயற்குழு ஜீவானந்தம், குடியிருப்போர் நலச்சங்க பொதுச்செயலர் மருதவாணன் வாழ்த்திப்பேசினர். மாநாட்டில், அனைத்து அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து நெய்தல் கலைக்குழுவின் தப்பாட்ட இசையுடன் கலை இரவு நிகழ்ச்சி துவங்கியது. 'தமிழும் இசையும்' என்ற தலைப்பில் அரிமளம் பத்மநாபனும், 'வார்க்கப்படும் மக்களும் தீர்க்கப்படும் சிக்கலும்' என்ற தலைப்பில் குமரேசனும், 'வாழ்வை வழிமறிப்பது எது' என்ற தலைப்பில் கங்காதரனும் பேசினர். நிகழ்ச்சியில் பெண்ணின் பெருமையை விளக்கி, 'கொற்றவை' என்ற தலைப்பில் சென்னை விடியல் கலைக்குழுவினரின் நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை