உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர் விடுதியை சீரமைக்க வர்த்தக சங்கம் கோரிக்கை

மாணவர் விடுதியை சீரமைக்க வர்த்தக சங்கம் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என வர்த்தக சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் வர்த்தக சங்க தலைவர் சீனுவாச நாராயணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சுற்றியுள்ள 85 கிராமங்களை சேர்ந்த 160 மாணவர் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதி கட்டடம் சிதிலமடைந் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு பயந்து, விடுதியில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்று தெரிந்தவர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி விடுதி கட்டடத்தை சீர் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை