உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

முதுநகர் :குடிகாடு கிராமத்தில் தி.மு.க., உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். கடலூர் அடுத்த குடிகாடு கிராமத்தில் தி.மு.க., - பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அ.தி. மு.க., வில் இணையும் விழா நடந்தது. பா.ம.க., மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் அரங்கநாதன் தலைமையிலும், அமைச்சர் சம்பத் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந் தனர். விழாவில் எம்.எல். ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலர் குமரன், ஒன்றியச் செயலர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ