உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

சிதம்பரம் : கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட தே.மு.தி.க., 82 பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் 1வது வார்டில் கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை தே.மு.தி.க., வினர் திரண்டு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும் களைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்ட 82 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ