உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையம் பள்ளியில் குறுவட்ட கபடி போட்டி

சி.என்.பாளையம் பள்ளியில் குறுவட்ட கபடி போட்டி

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. கடலூர் கல்வி மாவட்ட உடற்கல்வி கழகம் சார்பில் பண்ருட்டி குறுவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி துவக்க விழா சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துகிருஷ்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.துணைத் தலைவர் நடராஜன், ஊராட்சி துணைத் தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் பண்ருட்டி குறுவட்ட பகுதியை சேர்ந்த மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் செய்திருந்தார். உதவி தலைமை ஆசிரியர் பார்த்திபன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி