உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உள்ளாட்சி தேர்தல் மனு: அமைச்சர் ஆ#வு

உள்ளாட்சி தேர்தல் மனு: அமைச்சர் ஆ#வு

சேத்தியாத்தோப்பு : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி. மு.க., வினரிடம் பெறப்பட்ட மனுக்களை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆய்வு செய்தார். புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஓன்றியங்கள் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கங்கைகொண்டான் பேரூராட்சிகளில் போட்டியிட அ.தி.மு.க., சார்பில் சேத்தியாத்தோப்பில் முன்னாள் சேர்மன்கள் லட்சுமிநாராயணன், செஞ்சிலட்சுமி, வள்ளிதில்லைமணி, உமாமகேஸ்வரன் அடங்கிய குழுவினர் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றனர். இப்பணிகளை தேர்தல் பொறுப்பு குழுத்தலைவர் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் நிர்வாகிகள் சிவப்பிரகாசம், ஜெயபாலன், இளஞ்செழியன், நன்மாறன், முத்துகனகராஜ், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ