உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்ட சாரண, சாரணியர்களுக்கான ஆளுநர் விருது தேர்வு முகாம் நிறைவு விழா

கடலுார் மாவட்ட சாரண, சாரணியர்களுக்கான ஆளுநர் விருது தேர்வு முகாம் நிறைவு விழா

சிதம்பரம்: கடலுார் மாவட்ட சாரண, சாரணியர்களுக்கு ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நடந்தது.சிதம்பரம் வீனஸ் பள்ளியில் நடந்த முகாமில் கடலுார், சிதம்பரம் சாரண மாவட்டத்தில் இருந்து 35 பள்ளிகளை சேர்ந்த 207 சாரணர்கள், 137 சாரணியர்கள் மற்றும் 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில் வீனஸ் குழுமப்பள்ளிகளின் தாளாளர் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு ஆணையர் ஜெயந்தி வரவேற்றார். பள்ளி நிர்வாக அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன் வாழ்த்துறை வழங்கினர். முதன்மை தேர்வாளர்கள், வேலாயுதம், வீரப்பா, செந்தில்குமார், உஷாராணி ஆகியோர் ஆளுநர் விருதுக்காக சாரணியர்களை தேர்வு செய்தனர். முகாமில் சாரண சட்டம், குறிக்கோள், முதலுதவி, நிலப்படக்கலை, கயிற்ணுக்கலை, கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செய்முறைகள், எழுத்துதேர்வுகள் நடந்தது.முகாம் ஏற்பாடுகளை மாவட்ட செயலர் செல்வநாதன், அமைப்பு ஆணையர்கள் ஆம்ஸ்ட்ராங், வெங்கடேசன், கோமதி, பாலாஜி, சிவக்குமார், சுபைக் ஆகியோர் செய்திருந்தனர். சிதம்பரம் செயலர் பாக்யராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை